Friday, June 13, 2014

Our's Little Star V.T.Pranav's first day of schooling stills...




போதுமே...
முதல் நாளிலேயே இவ்வளவு பில்ட் அப் பண்ணுறீங்களா.. சரி சரி என் மகனா இருந்துக்கிட்டு இது கூட பண்ணல னா
எப்டி...   



காருக்குள்




என் செல்வம் பள்ளி செல்லும் முதல் நாளில் இயற்கையின் ஆசீர்வாதம் மழையாக... 











Evans matric hr sec School.



Sunday, March 23, 2014

நடை பயணம்...




தினமும் சாப்பிடும்பொதெல்லாம் தூங்கி விழுந்தால் வேறு வழி இல்லாமால் சாப்பிட்ட அளவே போதும் என விட்டுவிடுவார் என் மனைவி.... இது தொடர்ந்ததால் உடல் மெலிந்து கொண்டே வந்தார் எங்கள் செல்லக் குட்டி... ஆகவே இப்போது தூங்கி வழின்ட்தாலும் கூட நடக்க வைத்து விளிக்க வைத்து உணவூட்டுகின்றார்... பார்க்க கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவரின் ஆரோக்கியமே முக்கியம் என்பதால் தொடர்கிறோம் நடை பயணத்தை.....

Wednesday, March 5, 2014

பாசம் நிறைந்த குடும்பம்...

மகளை கொஞ்சும் போது குத்தக்
கூடாது என்பதற்காக தினமும் சவரம்
செய்வது தந்தையின் பாசம்.

மகளுக்கு குடையாக வேண்டும்
என்றே சேலை முந்தானையை பெரிதாக
விட்டு சேலை கட்டுவது அன்னையின்
பாசம்.

பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும்
என்றே தன் மணநாள் பட்டுச்
சேலையை பத்திரப்படுத்து
வது பாட்டியின் பாசம்.

பேரனுக்கு தும்மல் வந்து விடும்
என்று அவனைக் கண்டதும் மூக்குப்
பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின்
பாசம்.

தங்கைக்காக கிரிக்கெட்
சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின்
பாசம்.

அண்ணின் தவறுக்கு தந்தையிடம்
திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

தனக்கு பிடித்ததை தன்
தம்பிக்கு கொடுத்து அழகு பார்ப்பது அக்காவின்
பாசம்.

‪#‎சொர்க்கத்தை‬ மண்ணில்
காட்டுவது பாசம் நிறைந்த குடும்பம்.

Tuesday, February 18, 2014

அழகே அழகு...

Pranav with his Uncle Milanso....

இன்று மாலையில் என் மனைவி எங்கள் ப்ரணவ் இடம் ஏதோ ஒரு சிறிய உதவி கேட்கையில் செய்யாமல் இருந்ததால் செல்லமாக ஒரு அடி கொடுத்து உள்ளார்.. அடி வாங்கிய உடனே எங்கள் செல்லம் சிறிது தள்ளி நின்று என்னை அடித்தாய் அல்லவா உன்னிடம் நான் பேச மாட்டேன் உன்னை  விளையாட்டுக்கு சேர்க்க மாட்டேன் உன்னோடு டூ என்று சொல்லி உள்ளார்... அதற்கு என் மனைவியும் நானும் உன்னோடு பேச மாட்டேன் உன்னோடு விளையாட மாட்டேன் கடைக்கு உன்னை கூட்டி செல்ல மாட்டேன் என்று சொன்ன உடனேயே அம்மா நான் உன்கூட டூ இல்ல உன் கூட சேர்ந்து விளையாடறேன் என்னையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கோ அம்மா என்று தன மழலை மொழியில் சொல்லி இருக்கான்.... அதை அவன் சொல்லும் அழகே அழகு...

Saturday, February 15, 2014

அப்பா ....





 உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன்.

னைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை.

குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா.

மகன், மகள் இன்றையத் தேவைகளைவிட வருங்காலத் தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் படைத்தவர்.

மகளின் பிரிவிலும்,மகனின் உயர்விலும் ஆனந்த கண்ணீரில் மனதுக்குள்ளேயே கூத்தாடும் பாசமிக்க உயிர்.

தன் பிள்ளைகளின் சுகத்துக்காகவும் உயர் கல்விக்காகவும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்துக்கு பிரிந்து சென்று பணி புரிந்து சம்பாதித்து பணம் அனுப்பி,மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரிகளால் அவமானப்பட்டாலும் குழந்தைகளின் கல்வியை முன்னிட்டு வேலையை விடாமல் அந்த கஷ்டங்களை சகித்துக் கொள்ளும் தன்னலமற்றவர்.

மகனுக்கும் மகளுக்கும் அவர்கள் சம்பாதிக்கும்வரை ஒரு தூணாக, சுமை தாங்கியாக இருப்பவர்...

Saturday, February 8, 2014


குளிக்கும் போது தான் எத்தனை அடம்....



எங்கள் குட்டியை குளிப்பாட்ட எத்தனை பாடுகள்... 
குளிக்க மாட்டேன் என்று அடம்...
சோப்பு போடமாட்டேன் என்று அடம்...
ஷாம்பூ வேணாம் என்று அடம்...
அம்மா குளிக்காம என்ன குளிப்பாட்டுறாங்க என்று அடம்...
சோப்பு போட்டதும் தன் அம்மாவை கட்டிக் கொண்டு சோப்பு நுரையை தன் தாயின் மேல் ஒட்டி வைப்பது...
 குளித்த பின்பு பாத்ரூமை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று அடம்...
கதவுகளை மூடினால் மட்டும் வெளியில் வருவேன் என்று அடம்...
பிறகு ஜன்னல்களை மூடினால் தான் வெளியில் வருவேன் என்று அடம்... அப்பப்பா எத்தனை அடம்...