Saturday, January 11, 2014

மழலைச் சொல்...




’குழல் இனிது; யாழ் இனிது’ என்ப-தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்.

விரிவுரை :
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேளதவர்கள்தான் குழல் இனிமையானது அன்றில் யாழ் இனிமையானது என்பார்கள்.

இசைக் கருவிகளில் இசை மேதைகள் வாசிக்கும் போது கிட்டும் ஓசை இனிமையைச் சிறந்தது என்று சொல்கிறவர்களே, நீங்கள் உங்கள் மக்களின் மழலைச் சொல் கேட்டிருக்கிறீர்களா? அதைக் காட்டிலும் சிறப்பானதாக எந்த இசையும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையானது, சுகமானது குழந்தைகளின் மழலை மொழி என்கின்றார் வள்ளுவர். உண்மைதானே.

குழந்தைகளின் மழலை எனும் குதலை மொழி கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம். ஒலிப் பிரட்சியும், மொழிப் பிரட்சியும், இலக்கணத் தவறுகளும், முழு முதற் பிரயோகங்களும், குரலோசை நயங்களும் சில சமயங்களில் புரட்சிகளும், புதுமைகளும், பாவனைகளும், பாசாங்குகளும், நடிப்புக்களும் அறிவின் வளர்ச்சியைப் பிரதி பலிக்கும் அற்புத வெளிப்பாடுகள். இன்பம் பொழியும் சிந்துக்கள். இயற்கை அளிக்கும் முத்துக்கள். சில வேளைகளில் அர்த்தமற்ற அல்லது விளங்காத புதுக் கவிதைகள். எந்தக் கவிஞனுக்கும் சிந்தனைக்குள் சிக்காத கவிதை வரிகள். எந்த இசை மேதைக்கும் எந்தக் கருவிகளிலும் கட்டுப்படாத இசை ஆரவாரங்கள்; மழலைகள்.

மொழிகளே கூட மூல வார்த்தைகளைப் பல சமயம் மழலைகளிலே தான் தத்தெடுத்திருக்கும்.
குறிப்புரை :
குழந்தையின் மழலை கேட்பன எல்லாவற்றிலும் மிக இனிமையானது.
இன்று அதி காலையில் அரைத் தூக்கத்தில் தன்  அம்மாவை அடித்தான் எங்கள் செல்லம்.... ஏனென்றால் நேற்று மதியம் சமையல் செய்கையில் மசாலா கலக்கும் போது ப்ரணவ் கைகளில் கொடுக்கவில்லையாம் அதனை நினைவில் வைத்து இந்த அதிகாலையில் அரை தூக்கத்தில் தன்  தாயுடன் சண்டை போடுகிரானென்றால் பிஞ்சுக் குழந்தைகளின்       உள்ளம் எதை எல்லாம் பதிந்து கொள்கிறது என்று எண்ணி வியந்தேன்.....   குழந்தை தானே என்று விளையாட்டாக நாம் நினைத்தாலும் அவர்கள் எவ்வளவு உன்னிப்பாக நம்மை கவனிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே....

Friday, January 3, 2014



எங்கள் செல்லக் குட்டி ப்ரணவ் வின் பிறந்த நாளான நேற்று நேரிலும், தொலை பேசியிலும், முக நூலிலும், இ மெயிலிலும் வாழ்த்து தெரிவித்த அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் சார்பாகவும் எங்கள் செல்லம்  ப்ரணவ் சார்பாகவும் கோடானு கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.... பிறந்த நாளில் எடுக்கப் பட்ட புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு விரைவில்....